ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Estimated read time 1 min read

ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்வி நிதி, மலிவு வீட்டு வசதி, ஓய்வூதிய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இத்தாலியின் ரோம், டூரின் நகரங்களிலும் மோதல் ஏற்பட்டது. ரோமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் வெளியேற்றினர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் சாலைத் தடுப்புகள் மற்றும் குப்பைத்தொட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன், கடைகளில் கொள்ளைச் சம்பவங்களும் நடந்தன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அல்பேனியாவில் கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டமும் வன்முறையாக மாறியது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்வதால் பதற்றம் நிலவுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author