வதந்திகளை நம்ப வேண்டாம்..! “எந்த ஒரு பொருளின் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை!” – ஆவின்..!

Estimated read time 0 min read

ஆவின் நிர்வாக இயக்குனர் சிவராசு வெளியிட்டு அறிக்கை:

ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. எந்த ஒரு பொருளின் உற்பத்தியும், முழுமையாக நிறுத்தப்படவில்லை. அனைத்து வகையான பால் பொருட்களும், வழக்கம் போல தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும், சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன.

ஆவின் வாயிலாக, 175க்கும் மேற்பட்ட பால் பொருட்களை தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப சந்தைப்படுத்தப்படுகிறது. தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கிய பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், தேவைக்கேற்ப வினியோகம் செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனை நிலையங்களில் இருந்து பெறப்படும் தேவை கணிப்பு பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்கு தேவையான பால் பொருட்களை, தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவின் வாயிலாக பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு, நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப, தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது.

இவ்வாறு ஆவின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author