நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாய்கிழமை இரவு 9.40 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு முன் தரை ஊழியர்களால் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தரை ஊழியர்கள் விமானிகளை எச்சரித்த உடன் அவர்கள் விமான இயந்திரங்களை உடனடியாக ஆஃப் செய்தனர்.