கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!

சித்ரா  பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சித்ரா பவுர்ணமியன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வருவதற்காக, திருவண்ணாமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் நகரம் முழுவதும் ஸ்தம்பித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையிலும், பக்தர்கள் அதனைப் பொருட்படுத்தாது அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய முற்பட்டனர்.

கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் பல பக்தர்கள் கோவிலுக்குச் செல்லாமலே ஏமாற்றத்துடன் திரும்பினர்.

You May Also Like

More From Author