வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்..!! 10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்..!!

Estimated read time 0 min read

23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 6ஆம் நாளான நேற்று (ஜூலை 28), இந்திய வீரர்கள் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அத்துடன் குத்துச்சண்டைப் போட்டிகளில் 3 வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி மேலும் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணியின் மொத்த பதக்க எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதுடன், பதக்கப் பட்டியலில் 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறது.

ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையாளரான குல்வீர் சிங், பந்தய தூரத்தை 27 நிமிடம் 49.78 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வரலாற்றில், 10,000 மீட்டர் தடகளப் பிரிவில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை குல்வீர் சிங் படைத்துள்ளார்.

You May Also Like

More From Author