நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அரச குடும்ப இளவரசரும், அவரது ஆலோசகரும் மக்களுக்கு எதிரான சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் சங்கநாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று, அரச குடும்ப இளவரசரின் ஆலோசகர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இப்போது அவர்கள் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். எப்படி என்றால், நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்துக்களுக்கும் சேர்த்து வரி விதிக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், பாஜக ஆட்சியில் பொது மக்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.இதுவே மோடியின் கேரண்டி என்றார். தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கான ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.

You May Also Like

More From Author