மாட்ரிடில் ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூல் பற்றிய வாசிப்புக் கூட்டம்

ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலின் 5ஆவது தொகுதியின் வாசிப்புக் கூட்டம் 6ஆம் நாள் ஸ்பெயின் மாட்ரிட்டில் நடைபெற்றது. இதில் சீனா மற்றும் ஸ்பெயினிலிருந்த அரசு, பல்கலைக்கழகம், செய்தி ஊடகம் உள்ளட்ட துறைகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த வாசிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கூறுகையில், உயர் தர வளர்ச்சியை சீனா இடைவிடாமல் முன்னேற்றி, ஸ்பெயின் உள்ளிட்ட பன்னாடுகளுக்கு மேலும் பரந்த ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவும் ஸ்பெயினும் கூட்டு நலன்களை இடைவிடாமல் விரிவாக்கி, மேலதிக பொது கருத்துக்களைக் குவித்து, பரஸ்பர ஒத்துழைப்பை ஆழமாக்க்கி, உலக பொருளாதாரத்துக்கு நிதானத் தன்மையையும் நிச்சயத் தன்மையையும் ஊட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

You May Also Like

More From Author