சீனாவில் பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்க சலுகை விற்பனையை முன்னேற்றுவதற்காக, சீன வணிக அமைச்சகம் அக்டோபர் 28ஆம் நாள் தொலைக்காட்சி மற்றும் தொலைப்பேசி வழியாக கூட்டம் நடத்தியது. இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதிலுள்ள முன்னேற்றம் மற்றும் சாதனைகள் இக்கூட்டத்தில் தொகுத்து கூறப்பட்டு, அடுத்த கட்டத்துக்கான பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
2026ஆம் ஆண்டு, சீன வணிக அமைச்சகம், பல்வேறு பிரதேசங்களிலுள்ள தொடர்புடைய பிரிவுகளுடன், கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் கொள்கை தீர்மானங்கள் மற்றும் ஏற்பாடுகளைச் செவ்வனே செயல்படுத்தி, பணி அமைப்புமுறையை மேம்படுத்தி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இந்தக் கொள்கையைப் பெரிதும் நடைமுறையாக்கியுள்ளது. இதன் மூலம், தொடர்புடைய வகைகளான பொருட்களின் விற்பனை தொகை 2 லட்சம் கோடி யுவானை எட்டி, 25 கோடி மக்களுக்கு நன்மை பெற்றுள்ளன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
