80 சதவீதத்துக்கு மேற்பட்ட இலையுதிர்கால தானிய அறுவடை நிறைவு

Estimated read time 0 min read

தற்போது சீனாவில் இலையுதிர்கால தானிய அறுவடைப் பணிகள் சீராக மேற்கொண்டு வருகின்றன. இப்பணிகள் இதுவரை 80 சதவீதம் நிறைவடைந்து, கடந்த ஆண்டை விட வேகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில், முன்னணி தொழில்நுட்பங்களையும் முக்கிய பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பதன் மூலம், தானியங்கள் மற்றும் எண்ணெய் பயிர்களுக்கு பெரியளவில் ஓர் அலகு பரப்பிற்கான விளைச்சலை அதிகரிக்கும் நடவடிக்கைகளை சீனா செயல்படுத்தியது.

அதே வேளையில், இலையுதிர்கால மற்றும் குளிர்கால பயிரிடல் பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன. இதுவரை சீனாவில் 30 சதவீதத்துக்கு மேல் குளிர்கால கோதுமை பயிரிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சூப்பர் எல் நினோவின் பாதிப்பை எதிர்கொண்டு, வேளாண் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புக்கான தொழில்நுட்பங்களை வலுப்படுத்தும் வழிகாட்டலை, சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author