பள்ளிகளில் மாணவர்களின் உடல் தகுதியையும் மன உறுதியையும் மேம்படுத்த உடற்கல்வி வகுப்புகளை (PT Period) எந்தக் காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
*”மாணவர்களுக்குக் கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடற்தகுதியும் (Physical Fitness) மன உறுதியும் (Mental Fitness) மிக மிக முக்கியம். 50 ஆண்டுகளை நெருங்கும் நமது பள்ளிக்கூடத்தில் எந்தக் காரணம் கொண்டும் பி.டி பீரியடை கட் செய்யவே வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதற்காகவே அரசுப் பள்ளிகளில் கால அட்டவணையை மாற்றி, வாரம் இரண்டு நாட்களாக இருந்த பி.டி பீரியடை, வாரத்தில் 5 நாட்களும் தினமும் ஒரு பி.டி பீரியட் என மாற்றியமைத்துள்ளோம். உடற்தகுதியும் மனத் தகுதியும் இணையும்போதுதான் சமூகத்தைப் பற்றி யோசிக்கும் உணர்வுப்பூர்வமான தகுதி (Emotional Fitness) மாணவர்களுக்கு வரும்”* என்று கூறினார்.
“FAST விழிப்புணர்வால் என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினோம்!” – நெகிழ்ச்சிப் பகிர்வு!
தொடர்ந்து பக்கவாதம் (Stroke) விழிப்புணர்வு குறித்துப் பேசிய அவர்:
*”மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் ‘FAST’ (F – Face, A – Arms, S – Speeds/Speech, T – Timing) என்ற பக்கவாத அறிகுறிகள் குறித்த அம்பாசிடர்களாகச் செயல்பட வேண்டும். அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக 106 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.
நான் கோயம்புத்தூர் பள்ளியொன்றில் இதைப் பற்றிப் பேசியிருந்தேன். ஒருமுறை என் தந்தைக்குக் கைகள் மரத்துப் போய் காபி கப்பைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டபோது, எனது மனைவி இந்த விழிப்புணர்வை நினைவில் கொண்டு உடனடியாக அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் ஆரம்பத்தில் சாதாரண தசைப்பிடிப்பு எனக் கருதியபோதும், என் மனைவி வற்புறுத்தி ஸ்கேன் செய்ய வைத்தார்.
அப்போதுதான் மூளையில் ‘ஸ்ட்ரோக்’ (Stroke) ஏற்பட்டது தெரியவந்தது. அந்த முக்கியமான ‘கோல்டன் ஹவர்’ நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால், சரியான ஊசி செலுத்தி என் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இதற்குக் காரணம் இந்த விழிப்புணர்வுதான்”* என்று உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
