இவ்வாண்டின் தொடக்கம் முதல் இது வரை, சீனக் கடல் சார் பொருளாதாரம் நிலையாக வளர்ந்து வருவதோடு, அதன் கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இது தொடர்பாக சீனத் தேசிய இயற்கை மூலவள அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீனாவின் கடல் சார் பொருளாதார உற்பத்தி மதிப்பு 8 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இவ்வமைச்சகம் 28ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், கடல் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடல் உற்பத்திப் பொருட்களின் அதிகரிப்பு விகிதம் 4.6 விழுக்காடாகும்.

கடல் கப்பல்களுக்கான புதிய முன்பதிவுகள் எண்ணிக்கை, கட்டிமுடிக்கப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை, கைவசமுள்ள முன்பதிவுகள் எண்ணிக்கை முறையே 98.5, 35, 41.9 விழுக்காடாக உள்ளன. சர்வதேசச் சந்தையில் சீனாவின் பங்கு தொடர்ந்து உலகளவில் முன்னணியில் உள்ளது. கடற்கரைத் துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகள் மற்றும் கொள்கலன்களின் அதிகரிப்பு விதிகம் முறையே 1.6 மற்றும் 4.7 விழுக்காடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
