வேளாண் உற்பத்திப் பொருட்களின் தர மேம்பாட்டுக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட சீனா

Estimated read time 1 min read

வேளாண் உற்பத்திப் பொருட்களின் தர மேம்பாட்டுக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தைச் சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் 2030ஆம் ஆண்டுக்குள் வேளாண்மையின் உயர் தரமான வளர்ச்சி வரையறை முறை மேலும் முழுமைப்படுத்தப்பட வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களின் வரையறைமயமாக்க  பசுமைமயமாக்க உற்பத்தித் திறன் குறிப்பிட்டளவில் உயர்த்தப்பட வேண்டும். சந்தையின் தேவையை வழிகாட்டலாகக் கொண்டு  தர மதிப்பீடு மற்றும் தரவகைப்பாட்டு அமைப்பு முறை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். நாடளவில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்புக்கான வரையறைக்கேற்ற விகிதம் 98விழுக்காட்டுக்கு மேல் நிலைப்படுத்தப்பட வேண்டும். புகழ், தனிச்சிறப்பு, தரம் மற்றும் புதுமை வாய்ந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள், புவியியல் அடையாளம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையை 1லட்சத்து 30ஆயிரமாக உயர்த்த வேண்டும் எனும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.  

படம்:VCG

Please follow and like us:

You May Also Like

More From Author