
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் இன்ப அதிர்ச்சியாக வெள்ளி விலை 5000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
அதன்படி இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,05,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 14395 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 215 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
