தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்…

Estimated read time 1 min read

காலி மது பாட்டில்களைப் திரும்பப் பெறும் நடைமுறையில் நிலவும் பணிச்சுமை மற்றும் டிஜிட்டல் முறையில் பார்கோடு ஸ்கேன் செய்வதில் உள்ள காலதாமதத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று திடீரென கடைகளைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போதிய இடவசதியும் ஊழியர் பலமும் இல்லாத நிலையில் இந்த முறையை அவசரகதியாக அமல்படுத்தியதாகக் கூறி இன்றும் போராட்டத்தை தொடர ஊழியர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகையாகப் பெறப்படும் ₹10-ஐ திரும்ப வழங்குவதில் சில்லறைப் தட்டுப்பாடு, மெதுவான மென்பொருள் செயல்பாடு மற்றும் கூடுதல் பணிச்சுமை ஆகியவையே போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடைகளைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடர் போராட்டத்தால் அரசிற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author