நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Estimated read time 0 min read

வார விடுமுறை தினத்தை ஒட்டி நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

குடும்பத்தினருடன் அகஸ்தியர் அருவில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

அருவிக்கு செல்லும் வழியில் வனத்துறையினர் அமைத்துள்ள விளையாட்டு தளத்தில் பள்ளி குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

You May Also Like

More From Author