மஞ்சள் ஆற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் பணி பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவு அளித்தார். சீனக் கம்யூனிஸ் கட்சியின் தலைமையில் சீன மக்கள் மஞ்சள் ஆற்றை 80 ஆண்டுகளாக மேம்படுத்தி வருகின்றனர்.
புதிய காலத்தில் பாதுகாப்புப் பணியையும் ஒருங்கிணைப்புச் செயல்பாட்டையும் தொடர்ந்து சீராக மேம்படுத்தி மஞ்சள் ஆற்றுப் படுகையின் உயிரின வாழ்க்கையின் பாதுகாப்பையும் உயர் தர வளர்ச்சியையும் உறுதியாக முன்னேற்றி, நாட்டின் இயற்கைச் சூழல் தடுப்பணையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நம் தாய் ஆற்றை மேலும் அழகாக அமைக்கப் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மஞ்சள் ஆறு பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் பணிக் கூட்டம் நவம்பர் 2ஆம் நாள் ஹெனான் மாநிலத்தின் செங்சோ நகரில் நடைபெற்றது.
