அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அருணாச்சல் மாநில அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

இந்நிலையில், பாஜக தலைவர்களுக்கு முதல்வர் பெமா காண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுள் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இதில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 13 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

You May Also Like

More From Author