சீன வணிகத் துறை அமைச்சகத்தின் நுகர்வு முன்னேற்றப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில், ஜுலைத் திங்களில் சீனாவின் நுகர்வுச் சந்தை நிலைமை குறித்து அறிமுகம் செய்தார்.
இவ்வாண்டில் சீன நுகர்வுச் சந்தையில் புதிய மற்றும் சிறந்த வளர்ச்சி போக்கு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சந்தை அளவு நிலையாக விரிவாகி வருவதுடன், வளர்ச்சி தரமும் உயர்ந்து வருகிறது என்றார். மேலும், ஜனவரி முதல் ஜுலைத் திங்கள் வரை, சமூக நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் சில்லறைத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை தொகை, 28.77 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், வாகனம் தவிர, இதர நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை, 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் அறிமுகம் செய்தார்.
