ஃபெங்லியுவான் ஜெர்மனி அரசுத் தலைவரின் துணைவியாருடன் சந்திப்பு

Estimated read time 1 min read

30ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் ஃபெங்லியுவான் அம்மையார் பெய்ஜிங்கில் ஜெர்மனி அரசுத் தலைவரின் துணைவியார் பூடன்பெண்டருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.

சீன-ஜெர்மன் மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றம் தொடர்பான திரைப்படத்தை அவர்கள் கண்டுரசித்தனர். ஃபெங்லியுவான் அம்மையார் கூறுகையில், இரு நாட்டு மக்கள் அடிக்கடி பரிமாற்றம் மேற்கொண்டு, ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை இடைவிடாமல் அதிகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

பூடன்பெண்டர் கூறுகையில், இரு நாட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் இலட்சியம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கு பங்காற்றி, இரு நாட்டு மக்களின் நட்புறவை அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author