சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தை

பெய்ஜிங் மாநகரில் ஜூன் முதல் நாள் நடைபெற்ற 5ஆவது சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும், பிரேசில் வெளியுறவு அமைச்சர் வியெராவும், கலந்துகொண்டனர்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களை சீராக நடைமுறைப்படுத்த வேண்டும். சீன-பிரேசில் பொது சமூகத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து ஆழமாக்கி, வெளிபுற அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும். தத்தமது நவீனமயமாக்க முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, உலகின் தெற்குலக நாடுகள் கூட்டு வளர்ச்சி மற்றும் சுயவலிமையைப் பெறப் பாடுபட்டு, பதற்றமான உலக சூழ்நிலையில் உறுதியான தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்றார்.

வியெரா இதில் கூறுகையில்,

பிரேசில்-சீன உறவு, வளரும் நாடுகளில் தற்சார்ப்பைப் பின்பற்றி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் பெரிய நாடுகளுக்கிடையில் உறுதியான, முன்கணிப்புத் தன்மை வாய்ந்த உறவை வளர்ப்பதற்கும் ஒரு முனஅமாதிரியாகும் என்றார்.

You May Also Like

More From Author