மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Estimated read time 0 min read

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிவப்பு கம்பளம் மற்றும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி முருகப் பெருமானை தரிசனம் செய்தார்.

பின்னர் கொடிமரம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வழிபாடு நடத்தினார். இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு பிரசாதம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி மற்றும் அவரது மகன்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author