துனீசிய அரசுத் தலைவராக தொடர்ந்து பதவி ஏற்றுள்ள கைஸ் சையத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 9ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், சீனா மற்றும் துனீசியாவுக்குமிடையில் ஆழ்ந்த பாரம்பரிய நட்பு பரவி வருவதாகக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், கடந்த சில ஆண்டுகளில், நமது கூட்டு தலைமையில், இரு நாட்டுறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதோடு, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளால் அதிகமான சாதனைகள் பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவு தொடர்ந்து ஆழமாக முன்னேறி வருவதாகவும், இரு தரப்புறவில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கைஸ் சையத்துடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவான இவ்வாண்டில், இரு தரப்புகளின் நட்பார்ந்த உறவைத் தொடர்ந்து ஆழமாக்கி, பல்வேறு துறைகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, இரு தரப்பு நெடுநோக்குக் கூட்டாளியுறவின் நிலையான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.