சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு 57 கோடி டாலருக்கு அதிகமான ஆயுத உதவி அளிக்கும் என்று அமெரிக்க வெள்ளைமாளிகை டிசம்பர் 21ஆம் நாள் அறிவித்தது. ஒரே நாளில், தைவான் பிரதேசத்துக்கு 29 கோடி 50 லட்சம் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவலை வெளியிட்டது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது சீனாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.
தைவான் பிரதேசத்திற்கான அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் ஆயுத விற்பனை, ஒரே சீனாக் கொள்கை, சீனா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட மூன்று கூட்டறிக்கைகள் ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது. இது, சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களையும் கடுமையாக மீறியுள்ளது. ‘தைவான் சுதந்திரத்திற்கு’ ஆதரவு அளிக்காது பற்றிய அமெரிக்க தலைவரின் வாக்குறுதியையும் இது மீறியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரப்பூர்வமான வழியில் அமெரிக்காவிடம் சீனாவின் நிலைப்பாட்டை எடுத்து கூறியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
தைவான் விவகாரம், சீனாவின் முக்கிய நலன்களில் மையமாகவும், சீன-அமெரிக்க உறவில் தாண்ட முடியாத சிவப்புக் கோடாகவும் திகழ்கிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க, சீனா அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.