ஐ.நா மனித உரிமைகள் கவுன்சினின் 62ஆவது கூட்டத்தில் மகளிர் உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றது. சீனப் பிரதிநிதிக் குழுவின் துணை தலைவர் லி சியௌமெய் இதில் உரைநிகழ்த்தி, சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மகளிர் மீதான எந்த வடிவ வன்முறை செயல்களையும் சீனா உறுதியாக எதிர்த்து ஒடுக்கும். மகளிர் மீதான வன்முறை செயல்களை நீக்குவதற்கான முழுமையான சட்ட கண்காணிப்பு அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது. 2026-2030 தேசிய மனித உரிமைகள் செயல் திட்டத்தை சீனா அண்மையில் வெளியிட்டது. இதன் மூலம், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புமுறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, உலகின் மகளிர் மற்றும் பெண் குழந்தை இலட்சியத்திற்கு மேலதிகமான நிலைத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரப்படும் என்றார்.
