நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் ராப் கலைஞரும், ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் தலைவருமான பாலேந்திர ஷா (35), நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமராக இன்று (மார்ச் 27) பதவியேற்றார்.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஊழலற்ற ஆட்சி மற்றும் தலைமுறை மாற்றத்தை வேண்டி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக பாலேந்திர ஷாவின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை அவரது சொந்த கோட்டையான ஜாபா-5 தொகுதியில் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது நேபாள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா
