ஆபத்தான சமிகையை வெளியிட்ட ஜப்பான்

Estimated read time 1 min read

ஜப்பான் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான 3 ஆவணங்களைத் திருத்துவது குறித்து அரசுக்கு ஒப்படைக்கும் வரைவு ஒன்றை ஜப்பானின் லிப்ரல் ஜனநாயக கட்சி அண்மையில் அங்கீகரித்துள்ளது. இது 2ஆவது உலக போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட ஜப்பான் தனது பாதுகாப்பில் மட்டும் ஊன்றி நிற்கும் என்ற கோட்பாடை மீறியுள்ளது. புதிய ரக ராணுவ வெறி, பிரதேச மற்றும் உலகிற்கான அறைகூவலாக மாறியுள்ளது என்பதை இது வெளிகாட்டியது.

தற்போதைய ஜப்பான் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான 3 ஆவணங்கள், 2022ஆம் ஆண்டின் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டது. இவற்றுடன் ஒப்பிட்டால், புதிய ஆவணங்களை அங்கீகரித்த லிப்ரல் ஜனநாயக கட்சியின் நடவடிக்கைகள், போருக்கான நீண்டகால ஏற்பாடு செய்வதையும், முன்முயற்சியுடன் இராணுவ நடவடிக்கை  மேற்கொள்வதையும் எதிர்நோக்குகின்றன. ராணுவ விரிவாக்கமும் போர் ஆயத்தமும், நாட்டின் அமைப்பு முறை, பொருளாதாரம், தொழிற்துறை, சமூகம் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கவும், தாக்குதல்தன்மையையும் விரிவாக்கத்தன்மையையும் வாய்ந்த ஜப்பானின் தேசிய பாதுகாப்பு கொள்கையை முன்னேற்றவும் லிப்ரல் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

2ஆவது உலக போர்க்குப் பின் ஏற்பட்ட அமைதி அமைப்பு முறையை ஜப்பான் கைவிடுத்துள்ளது என்று இந்த மாற்றங்கள் புலப்படுத்துகின்றன. ராணுவ வெறியை ஜப்பான் விரைவாக மீட்டெடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author