தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடந்தன. இதில், 73 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னையின் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டார். சென்னையில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 84 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் 29 லட்சத்து 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
14 லட்சத்து 4 ஆயிரம் ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 9 ஆயிரம் பெண் வாக்காளர்களும் உள்ளதாக கூறியுள்ளார். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 139 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 852 வாக்காளர்களும் உள்ளனர் என குறிப்பிட்டார்.
மேலும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 79-ல் இருந்து 4 ஆயிரத்து 71ஆக குறைந்துள்ளதாக ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
