நீதிமன்றத்தை நாடுவோம்”
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளது. புகாரில், ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தொல்லை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “த.வெ.க ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை, பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. ஆதவ் அர்ஜுனாவின் வில்லிவாக்கம் தொகுதியில் பெண் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் குறித்து CBCID விசாரணை தேவை. அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. வில்லிவாக்கத்தில் பெண் காவலரை மோசமாக நடத்திய தவெகவினரை காவல்துறை விடுவித்தனர். அன்றே நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தவெகவினருக்கு வந்துவிட்டது. என்ன ஒரு திமிர்த்தனம்..! த.வெ.க ஆட்சியில் மிக கேவலமான ஒரு சம்பவத்தை இன்று தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்..! போதையில் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லத்திற்கே போய் இப்படி செய்யலாமா.? த.வெ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. பெண் ஆட்சியருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது போன்ற ஒரு சம்பவம் கடந்த 77 ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக இல்லை” என்றார்.
