சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கட்சியின் ஒழங்குமுறை பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் சமீபத்திய முழு அமர்வில் உரை நிகழ்த்துகையில், ஊழல் எதிர்ப்பு போராட்டம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பயன்களைப் பெற்றுள்ளதாகவும், சிக்கலான நிலைமையில் ஊழல் எதிர்ப்புக்கு உயர் அழுத்த நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதாக, பிரிட்டனின் ரெய்டர்ஸ், சிங்கப்பூரின் லியன்ஹே சாவ்பாவ், ரஷியாவின் RIA Novosti உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில் தெரிவித்துள்ளன.
ஊழலுக்கு எதிரான பரிசோதனையை சீனா மேலதிக துறைகளுக்கு விரிவாக்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு பற்றிய சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு சிறப்பு ஆவணப்படத்தில், சீர்கேடான நடத்தை ஊழல் பிரச்சினையாக மாறுவதைத் தடுப்பதில் சீனாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் சீனா மேலும் ஆக்கப்பூர்வமான நிதி மற்றும் நாணயக் கொள்கையை மேற்கொண்டு, பல முதலீட்டுத் திட்டங்களை வெளியிடுகிறது. இவை தொடர்பான துறைகள் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் முக்கிய துறைகளாகும் என்று கருதப்படுகிறது.
