ரயில் பயணிகளுக்கு ஷாக்..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரெயில்வே திட்டம்..!

Estimated read time 1 min read

ரெயில்களில் அனைத்து படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், மற்ற பயணிகளுக்கு ஆர்.ஏ.சி. முறையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது. இதன்படி, ஒரே கீழ்ப்படுக்கை இரு பயணிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். இருவரும் அமர்ந்து பயணிக்க முடியும் என்றாலும், இரவு நேரத்தில் படுத்து உறங்குவதற்கு முழுமையான படுக்கை வசதி கிடைக்காது.

ஆனால், இருவரிடமும் தனித்தனியாக முழுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இறுதி பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும் ஆர்.ஏ.சி. நிலையிலேயே நீடிப்பவர்களுக்கு முழுப் படுக்கை கிடைப்பதில்லை. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், ஒரே படுக்கையை ஆண், பெண் பயணிகள் பகிர்ந்து கொள்வதால் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களும் ஏற்படுகின்றன. இதனால் ஆர்.ஏ.சி. நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 4-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்கணக்குக் குழு அறிக்கையிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது. முழுப் படுக்கை கிடைக்காத பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்றும், அவர்களுக்கு ஒரு பகுதி கட்டணத்தைத் திருப்பி வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது ரெயில்வே முன்பதிவு முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகள் மற்றும் காலியாகும் படுக்கைகளை உடனுக்குடன் கண்காணிக்க முடிகிறது. இதனால் ஆர்.ஏ.சி. முறையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் உள்ளிட்ட சில ரெயில் சேவைகளில் ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை. உறுதிசெய்யப்பட்ட படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.

எனவே, ஆர்.ஏ.சி. முறையை முழுமையாக ரத்து செய்வதா அல்லது அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதா என்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதனால் பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு முடிவு வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author