ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்..! 6 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பேட்டரி கார் வசதி!

Estimated read time 0 min read

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமல்நாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட பேட்டரி கார் சேவை ஆரம்பத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு பயணிக்கு ரூபாய் 30 வசூலிக்கப்படுகிறது. அதே சேவை மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு மாற்றுத்திறனாளி மற்றும் அவரது வயதான தாயாருக்கு உரிய உதவி கிடைக்கவில்லை. சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி நடைமேடையில் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பேட்டரி கார்கள் இருந்தும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. திருச்சி கோட்டத்தில் உள்ள 151 ரயில் நிலையங்களில் 5 ரயில் நிலையங்களில் மட்டுமே பேட்டரி கார் வசதி இருக்கிறது. மதுரைக் கோட்டத்தில் உள்ள 101 நிலையங்களில் 6 நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

இரு கோட்டங்களிலும் மொத்தமுள்ள 252 ரயில் நிலையங்களில் 11 நிலையங்களில் மட்டுமே பேட்டரி கார் வசதி உள்ளது. மேலும், ரயில்வே வாரியத்தின் வணிகச் சுற்றறிக்கைகளின்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பேட்டரி கார் சேவையை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. எனவே திருச்சி ரயில் நிலையத்திலும் இலவச சேவையை வழங்க வேண்டும்.

மேலும், திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு பேட்டரி கார் சேவையை இலவசமாக வழங்க வேண்டும். பேட்டரி கார்கள் நிற்கும் இடங்களைக் குறிக்கும் அறிவிப்புப் பலகைகளை அமைக்க வேண்டும். 139 என்ற உதவி எண் உள்ளிட்ட புகார் தீர்வு அமைப்புகளை முறையாகச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், அனைத்து ரயில் நிலையங்களிலும் 6 மாதங்களில் பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author