இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் தமிழக முதல்வரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அதோடு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை 10.00 மணிக்கு சென்னை அடையார் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.