சென்னை : தமிழகத்தில் நிலவும் வறண்ட மற்றும் மாறும் வானிலைச் சூழல் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நவம்பர் 12-ஆம் தேதியன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்; ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மீண்டும் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. பிற தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
