குட் நியூஸ்..! சென்னை – கன்னியாகுமரி 10 வழிச்சாலை & கடல் வழிப் போக்குவரத்து – அமைச்சர் ஆதவ் அறிவிப்பு..!

Estimated read time 1 min read

அமைச்சர் ஆதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

தவெக அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஆறு மாதங்களில், அலுவலர்கள் மாறுதலுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறப்படவில்லை. கடந்த, 75 ஆண்டுகளாக தொலைநோக்கு பார்வையின்றி, பொதுப்பணித்துறை வாயிலாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தின் மதிப்பை கவனத்தில் கொள்ளவில்லை. பல நுாறு கோடி ரூபாய் நிலத்தில், சிறிய அளவிலான கட்டங்கள் கட்டப்பட்டு உள்ளன.

வரும் காலங்களில் நிலத்தின் மதிப்பை கருத்தில் வைத்து, அடுத்த, 50 ஆண்டுகளுக்கு தேவைப்படும் வகையில், 14 மாடி கட்டடங்கள் இனி கட்டப்படும். அமைச்சர்களின் பினாமி பெயரில், முந்தைய ஆட்சியில் நிறைய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட அரசு அனுமதி பெறாமலும் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நீதிமன்ற தடையால், அந்த கட்டடங்களை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. குறித்த காலத்திற்குள் பணியை முடிக்காத நிறுவனங்கள், கருப்பு பட்டியலில் கொண்டு வரப்படும். இப்போது டெண்டர் தொகையை விட, 27 சதவீதம் வரை குறைத்து பணிகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கும் மீதித்தொகை அரசு கஜானாவிற்கு செல்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் பொதுப்பணித்துறை வாயிலாக, அரசு பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 15,661 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த தகவலை எந்த அரசும் வெளியிட்டது கிடையாது. இது, 20 ஆண்டு கால பிரச்னை. பள்ளிகல்வித்துறை, நிதித்துறை அனுமதி பெற்று, இந்த கழிப்பறைகள் இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக சரி செய்யப்படும். சென்னை – துாத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், எட்டு முதல், 10 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை – கன்னியாகுமரி இடையே, 10 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கடல் வழி போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன், 17ம் தேதி முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. மழை முடிந்த பின், சாலைகளை புனரமைக்கும் பணிகள், 6,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். சென்னை திருவான்மியூர் – உத்தண்டி மேம்பால சாலைக்கு 1,600 கோடி ரூபாய் போதுமானது. இதற்கு, 2,100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அதை ரத்து செய்து ஆராய்ந்து வருகிறோம். சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை மேம்பாலம் ஏப்ரல் மாதத்திற்குள் திறக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையை, பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தனியாக அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வாறு ஆதவ் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author