மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அருகில், மே 21 ஆம் தேதி மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, மே 22ஆம் தேதி அந்த பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகக்கூடும்.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கும், நாளை 8 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை
