சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,
முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என அமர்வு தெரிவித்தது.
மனுவில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண, நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது சிரமமாக உள்ளது.
மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால், விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.