வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ளிட்ட ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
