“சம்மந்தப்பட்டது உங்கள் எம்.எல்.ஏ.தான்… இதிலும் வாயை மூடி மௌனமாக இருப்பது எப்படி சரியாகும்?”- தினகரன்

Estimated read time 0 min read

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை இல்லை என்றால் முதலமைச்சர் அலுவலகமோ, தலைமைச்செயலாளரோ மறுத்திருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறார் முதல்வர். பெண்களைப் பற்றி அவதூறு பரப்பினாலே கைது என்கிறார் முதல்வர் விஜய். ஆனால் ஒரு பெண் மாவட்ட கலெக்டர் விவகாரத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு வந்தபோது அது உண்மை இல்லை என்றால் முதல்வர் மறுத்திருக்க வேண்டும். அது உண்மை என்பது போல தான் தெரிகிறது. ஆனால் இதுவரை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எத்தனையோ தவெக நிர்வாகிகள் இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.. ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை இல்லை என்றால் முதலமைச்சர் அலுவலகமோ, தலைமைச்செயலாளரோ மறுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்டது உங்கள் எம்.எல்.ஏ.தான்… இதிலும் வாயை மூடி மௌனமாக இருப்பது எப்படி சரியாகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author