மனித முகத்துடன் வந்த சூரபத்மனை வதம் செய்த ஜெயந்திநாதர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா நவம்பர் 10 ஆம் தேதி துவங்கியது. ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாம் நாளான இன்று நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியை காண்பதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். சூரசம்கார நிகழ்ச்சி பார்த்து கடலில் நீராடி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, திருச்செந்தூர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. முதலில் சிங்க முகம் கொண்ட அசுரனையும், அதை தொடர்ந்து யானை முகம், அசுர முகம், சேவல் என அனைத்தையும் முருகர் வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ’முருகனுக்கு ஆரோகார’ என கோஷம் எழுப்பினர். திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்றார். திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனையும், தனது தாய் பார்வதி தேவியிடம் பெற்ற வேலால் முருகன் வதம் செய்தார் முருகன்.
