ஒரே நாளில் 14 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்- விஜய் அதிரடி

Estimated read time 1 min read

தேவக்கோட்டை டிஎஸ்பி கண்ணன், சென்னை குற்ற ஆவண காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு காவல்துறையை இறுக்கிப் பிடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்து 3 நாட்கள் உயர் அதிகாரிகளுடன் கிடுக்கிப்பிடி ஆலோசனை நடத்திய நிலையில், கடந்த 12.11.2026 அன்று ஒரே நாளில் 14 DSP-களை அதிரடியாக பந்தாடி உத்தரவு போட்டிருக்கிறது உள்துறை. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த R. பாலசுந்தரம் தஞ்சாவூர் SJ&HR பிரிவுக்கும், தேவகோட்டையில் இருந்த C. கண்ணன் சென்னை பெருநகர காவல் CRB பிரிவுக்கும், திண்டுக்கல் டவுனில் இருந்த N. கார்த்திக் மாநில தலைமையக SD CID-க்கும், தக்கலையில் இருந்த G. பதிபன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் அம்பாசமுத்திரம் SD-யில் இருந்த K. கணேஷ்குமார் ராமநாதபுரம் உளவுத்துறைக்கு (SB CID) அனுப்பப்பட்டு, அவர் இடத்திற்கு அரியலூரில் இருந்து P. சண்முகம் அம்பாசமுத்திரம் புது DSP-யாக போடப்பட்டுள்ளார்! திருச்செந்தூர் SD-யில் இருந்த M. மகேஷ்குமார் உளவுத்துறை Core Cell-க்கும், சிவகங்கையில் இருந்த R. புருஷோத்தமன் ஆவடி கமிஷனரேட் CRB-க்கும், A. அமலா ஆட்வின் மதுரை உளவுத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் உசிலம்பட்டியில் இருந்த G.S. ஜெய்கணேசன் சிவகங்கை Sub-Division-க்கும், அவருக்கு பதிலாக விழுப்புரம் பயிற்சி பிரிவில் இருந்த B. சதீஷ்குமார் உசிலம்பட்டிக்கும், கள்ளக்குறிச்சி DCRB-யில் இருந்த K. சரவணகுமரன் சிவகங்கை SJ&HR பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் இருந்த A. செந்தில் எழந்திராயன் மதுரை மாநகர CCB-II பிரிவுக்கும் போடப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author