62 நாட்கள் மண்டல கால பூஜைக்காக சபரிமலையில் நாளை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாட்டிற்காக நாளை (நவம்பர் 16) மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. நடை திறக்கப்படுவதைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி வரை 62 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. டிசம்பர் 27ஆம் தேதி பிரதான மண்டல பூஜை நடைபெறும் நிலையில், ஜனவரி 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி வழிபாட்டுக் கால நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு
