ஆசிட் லாரி விபத்து! திண்டுக்கல்லில் பரபரப்பு

Estimated read time 0 min read

திண்டுக்கல்லில் ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஆசிட் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் அருகே அதிகாலை 3.30 மணிக்கு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரி பாதை மாறி விபத்துக்குள்ளானதாகவும், இதில் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் லாரியின் வால்வு உடைந்து 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் சாலையில் கொட்டியது. ஆசிட் கசிவால் தொண்டை, கண் எரிச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி ஆசிட்டின் வீரியத்தை குறைத்தனர். விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author