கடலூரில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 12,860 கோழிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
கடலூரில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 12,860 கோழிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன. 5 பண்ணைகளில் இருந்த 12,860 கோழிகளை அழித்து கால்நடை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மண்ணில் புதைத்தனர். கோழிப்பண்ணையில் பணியாற்றியவர்கள் அருகில் இருந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தம்மூர் பேட்டையில் கோழிகள் இறந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 9 தனிப்படைகள் மூலம் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் உள்ள கோழிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் அடுத்த 90 நாட்களுக்குக் கோழிகள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, அப்பகுதி தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
