சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாத் தலைமை குழு உறுப்பினர்களாக பதவி ஏற்கும் ஜெல்கா ஸ்விஜனோவிச், டேனிஸ் பெசிரோவிச், டரிஜியானா பிலிபோவிச் ஆகியோருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் இதில் கூறுகையில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, தென் கிழக்கு ஐரோப்பிய பகுதியில் சீனாவின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புறவு நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருவதோடு, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளில் பல சாதனைகளைப் பெற்றுள்ளன. இரு தரப்புறவின் வளர்ச்சியில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். இத்தலைமை குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து, இரு நாடுகளுக்கிடையில் பாரம்பரிய நட்புறவு மற்றும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை மேம்படுத்த விரும்புகின்றேன் என்றும், அது மட்டுமல்லாமல், இரு தரப்புறவை மேலும் உயர் நிலைக்குத் தூண்டி, இரு நாடுகளின் மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
