6ஆவது சீன சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி துவக்கம்

Estimated read time 0 min read

6ஆவது சீன சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி ஏப்ரல் 13 முதல் 18ஆம் நாள் வரை ஹைனான் மாநிலத்தில் நடைபெறுகிறது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிலும், ஹைனான் தாராள வர்த்தக துறைமுகத்தில் முழு தீவு அளவிலான சிறப்பு சுங்க நடைமுறைகள் தொடங்கிய பிறகும் மேற்கொள்ளப்படும் முதலாவது பெரிய கண்காட்சி இதுவாகும்.

திறப்பு உலகளாவிய நுகர்வுக்கு வழிநடத்துதல் புத்தாக்கம் சிறந்த வாழ்க்கையை உருவாக்குதல் என்ற தலைப்பிலான நடப்பு கண்காட்சியில், 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3400க்கும் அதிகமான வணிகச் சின்னங்கள் உடைய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. உலகளாவிய தலைசிறந்த நுகர்வோர் பொருட்களின் கண்காட்சி மற்றும் பரிவர்த்தனைக்கான சர்வதேச தளமான இக்கண்காட்சியின் போது, புதிய தயாரிப்புகளின் வெளியீடு, வினியோகம் மற்றும் தேவை தொடர்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

You May Also Like

More From Author