சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 19ஆம் நாள் தென் கொரியாவின் சியோல் நகரில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாங் யீ கூறுகையில், இருநாட்டுத் தலைவர்கள் வழிநடத்திய பாதையில் சீன-தென் கொரிய உறவு தொடர்ந்து மேம்பட்டு வளர்ந்து வருகிறது என்றார். மேலும், தற்போதைய நிலையற்ற சர்வதேச நிலைமையில், இருதரப்பு உறவின் ஆரோக்கியமான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கு மேலும் நன்மை வழங்கவும், பிரதேசத்தின் அமைதியான வளர்ச்சிக்கு பங்களிக்கவும், சீனாவும் தென் கொரியாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இருநாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவு நெருங்கி வரும் நிலையில், சீன-தென் கொரிய உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைப் புதிய நிலைக்கு உயர்த்தவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் தென் கொரியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், இச்சந்திப்பின் போது பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்தும் இருதரப்பினரும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
