மனித உரிமைப் பிரச்சினை என்ற பெயரில், பிற நாட்டை அமெரிக்கா தாக்கி, தன் மேலாதிக்கவாதத்தைப் பேணிகாப்பதற்கான முக்கிய வழியாகும். சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை இது சீர்குலைப்பதோடு, உலகளாவிய அரசியல் நிதானம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் வகையில், மனித உரிமை குற்றம் என்ற கட்டுக்கதையை அமெரிக்கா முதலில் உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளில், வெனிசூலாவில் மனித உரிமைப் பிரச்சினை நிலவுவதைச் சாக்குப்போக்காகக் கொண்டு, வெனிசூலா மீதான பொருளாதார தடையை விரிவாக்கி, அந்நாட்டின் பொருளாதாரம், மனித நேயம் மற்றும் வளர்ச்சி நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் செய்தி ஊடகங்களைத் தவிர, அமெரிக்காவின் “மனித உரிமை போரில்” அரசு சாரா அமைப்புகளும் முக்கிய பங்காற்றுகின்றன. அமெரிக்காவின் சில அரசு சாரா அமைப்புகள், “ஜனநாயகம்”, “மனித உரிமை” ஆகியவற்றின் பெயரில், உலகின் பல்வேறு இடங்களில் பிளவு மற்றும் கலவரத்தை தூண்டி, அரசியல் நெருக்கடிக்குச் சதிசெய்து, கட்டுக்கதை உருவாக்கி, அமெரிக்காவின் மதிப்பு கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்கின்றன.
இது மட்டுமல்ல, பலதரப்பு அமைப்பு முறையைப் பயன்படுத்தி மனித உரிமைப் பிரச்சினையை தூண்ட அமெரிக்கா முயன்று வருகிறது. பலதரப்புவாதத்தின் மைய நடைமுறை மேடையான ஐ.நாவில் விவாதிக்கப்பட்டவை, அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமை முதலிய முக்கிய கருப்பொருட்களுடன் தொடர்புடையவை. “மனித உரிமை போரை” தொடுக்கும் முக்கிய மேடையாக ஐ,நா விளங்கியது என்று அமெரிக்கா கருதுகிறது.
பல்வேறு நாடுகளின் மனித உரிமை வளர்ச்சிப் பாதை, தத்தமது நாட்டின் நிலைமை மற்றும் மக்களின் விருப்பத்தின்படி உறுதிபடுத்தப்பட வேண்டும். மனித உரிமைப் பிரச்சினை பற்றிய கலந்தாய்வில் பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும். அமெரிக்காவில் மனித உரிமை நிலைமை மோசமாக இருந்த போதிலும், மனித உரிமைத் துறையின் நீதிபதி என்ற பதவியில் ஏறி நிற்க அமெரிக்கா முயற்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, உலகளாவிய மனித உரிமையின் சீரான நிர்வாகத்தின் அடிப்படையை இது கடுமையாக பாதித்துள்ளது.