13ஆம்நாள் நடைபெற்ற உலக மகளிர் உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர்
ஷிச்சின்பிங் பங்கேற்று பெய்ஜிங் உலக மகளிர் கூட்டத்தின் சிந்தனைகளைப் பரப்புரை
செய்வதும், மகளிரின் பன்முக வளர்ச்சியின் புதிய முன்னேற்றப் போக்கை
விரைவுபடுத்துவதும் என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
உலக
மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்கு ஷிச்சின்பிங்கின் உரை வழிக்காட்டலை வழங்கி
மகளிரின் பன்முக வளர்ச்சியின் புதிய முன்னேற்றப் போக்கை வலுவாக முன்னேற்றுமென
சர்வதேச பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ரஷிய-சீன
நட்பு சங்கத்தின் முதல் துணை தலைவர் கலினா குலிகோவா கூறுகையில், அரசுத் தலைவர்
ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய முன்மொழிவுகள் உலக மகளிர் லட்சியத்தின்
வளர்ச்சிக்கு நம்பிக்கையையும் உந்து ஆற்றலையும் கொண்டு வந்துள்ளதாகத்
தெரிவித்தார்.