கூகுள் நிறுவனம் அதன் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இது எந்தவொரு ஹெட்போனையும் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யும் சாதனமாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
இந்தச் சமீபத்திய அப்டேட், ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான பீட்டா கட்டத்தில் டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு பிக்சல் பட்ஸில் மட்டுமே இருந்த இந்த வசதி, இப்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் எந்த ஹெட்போனுடனும் வேலை செய்கிறது.
