அண்மையில் சில மேற்கத்திய ஊடகங்களும் சிந்தனை கிடங்குகளும், என்றழைக்கப்பட்ட “சீன நெருக்கடி” எனும் கருத்தை மிகைப்படுத்திக் கூறி வருவதாகவும், சீனாவின் தொழிற்துறை ஏற்றுமதியின் உலகளாவிய சந்தைப் பங்கை நெரிசலாக்கி, வளரும் நாடுகளின் தொழில்மயமாக்கலை பாதிக்கிறது என்றும் தெரிவித்தன.
இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஆடம் டூஸ் கூறுகையில், என்றழைக்கப்பட்ட “சீன நெருக்கடி” எனும் கருத்து பொருளாதாரத் தரவுகளுக்கான பகுப்பாய்வின் அடிப்படையில் முன்மொழியப்படவில்லை என்றும், அது அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் முற்றிலும் மோசடியான கருத்தாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சீனா மற்ற நாடுகளின் தொழில்மயமாக்கல் வாய்ப்புகளைப் பறிக்கிறது என்ற கூற்று குறித்து கருத்துத் தெரிவித்த அவர், உலகை இயல்பாக்குவதை விட சீனாவை நோயாக சித்தரிப்பதில் ஈடுபடும் இத்தகைய கூற்றுகள், உண்மைக்கு எதிரான உலகக் கண்ணோட்டம் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
